
கரோனா பொதுமுடக்கம் அமலில்இருக்கும் நிலையில், அண்மையில் தமிழக அரசு அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் 'அரியர்தேர்ச்சி' என்ற அறிவிப்புக்கு எதிராக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்,
தேர்வுஎழுதாமலேயே எப்படித் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கலாம் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,அரியர்தேர்வு ரத்து விவகாரத்தில்ஏ.ஐ.சி.டி.ஐவிதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அதேபோல் 'அரியர் தேர்வு ரத்து'க்குஆதரவாக வழக்கு தொடர மாணவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும். ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பி.இ படித்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,இது தொடர்பாக தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் பதிலளிக்க நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)