Skip to main content

 “சனாதனம் என்பது இந்துக்களின் நித்திய கடமையாகும்” - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Chennai High Court says Sanathanam is the eternal duty of Hindus

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், சமீபத்தில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். 

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். 

 

இதனையடுத்து, திருவாரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபத் சேஷசாயி முன் விசாரணைக்கு வந்த போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

 

அதில் அவர், “ சனாதன தர்மம் என்பது இந்து மத வாழ்க்கை முறையில் விதிக்கப்பட்ட நித்திய கடமைகளின் தொகுப்பு. அதில், தேசத்திற்கும், அரசனுக்கும், பெற்றோருக்கும், குருக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளும் அடங்கும். இந்த கடமைகள் எல்லாம் அழிக்கப்பட வேண்டுமா?. 

 

பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமை என்றாலும், அது மதம் சார்ந்த விஷயங்களில் வெறுப்பு பேச்சாக மாறக் கூடாது.  ஒவ்வொரு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே, மதம் தொடர்பான விஷயங்களில் பேசும் போது யாருக்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பேச்சு சுதந்திரம் வெறுக்கத்தக்க பேச்சாக இருக்கக் கூடாது” என்று கூறினார். 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Study of Minister Udayanidhi Stalin in rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“இளைஞரணி மாநாடு  முத்திரை பதித்து இந்திய அளவில் பேசப்படும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

dmk Youth Conference will be stamped and spoken Indian level says I.Periyaswamy

 

தி.மு.க இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்றது. அதன்பின்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளைத் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாகச் செய்து வருகின்றனர். 

 

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆலோசனைப்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், ஆத்தூர் மேற்கு ஒன்றியம், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம், மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள நிர்வாகிகள் சேலத்தில் நடைபெறும் 2வது மாநில திமுக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர் அணியினர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு திமுக இளைஞர் அணி சீருடை வழங்க அளவு எடுக்கப்பட்டு அதற்கான சீருடைகளும் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

 

இது சம்பந்தமாக அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், “கடந்த 2007 ஆம் வருடம் நெல்லையில் முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டிற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து திமுக இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அவர் வழியில் இன்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 17 ஆம் தேதியன்று சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். கட்சி வரலாற்றில் 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து மாபெரும் இளைஞர் படை கலந்துகொள்ளும் இளைஞர் அணி மாநாடு முத்திரை பதித்து இந்தியா அளவில் பேசப்படும்” என்று கூறினார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்