தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளர்கலைக் கூடத்திற்கு இன்று காலை 11.30 மணியளவில் வந்தார். அப்போது அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் 'கலைஞருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் கலைஞர் ஒழித்த கை ரிக்சா' குறித்த சிறப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.