Skip to main content

 புதுமண தம்பதி; தேனிலவு சென்ற இடத்தில் ஏற்பட்ட சோகம்!

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Chennai couple drowned in sea water in Indonesia

 

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியாவிற்கும் கடந்த 1 ஆம் தேதி மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் திருமணம் முடிந்த கையோடு இந்தோனேசியாவிற்குத் தேனிலவு சென்றனர். அங்கு பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர்.

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால் லோகேஸ்வரன் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். விபூஷ்னியாவை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதன்மூலம் தமிழக அரசுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 10 நாட்கள் கூட முடியாத நிலையில் புதுமணத் தம்பதிகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு, விஷ பூச்சிகளை பிடிக்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Notification of special numbers for catching snake venomous insects

 

                                                       கோப்புப்படம் 

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Chief Minister M.K.Stal's inspection at the relief camp

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று  தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்