Skip to main content

'என் சென்னை யங் சென்னை' தமிழக தலைநகரின் மனிதர்களை கொண்டாடும் திருவிழா

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Chennai Commissioner Shankar Jiwal inauguarates second edition of 'En Chennai Young Chennai'

 

ஆண்டுதோறும் தன் வசீகரத் தோற்றத்தாலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தாலும் இளமையாகிக்கொண்டே வரும் தமிழகத்தின் தலைநகர், ஆகஸ்ட் 22 அன்று சென்னை தினத்தைக் கொண்டாட தயாராகி வருகிறது. இந்தப் பெருநகரமும் இங்குள்ள வாழ்க்கைச் சூழல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்து உழைக்கும் சென்னை இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் முயற்சியாக ‘என் சென்னை யங் சென்னை’ என்ற நிகழ்வு இவ்வாண்டு நடத்தப்பட உள்ளது. இவ்வாண்டோடு இரண்டாவது அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த ‘என் சென்னை யங் சென்னை’ கொண்டாட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

 

இதுதொடர்பாக ‘என் சென்னை யங் சென்னை’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தினம் என்றாலே அதன் பாரம்பரியம், வரலாறு பற்றிப் பேசுவதும் ‘சென்னை நடைகள்’ மேற்கொள்வதும், உரைகள் நிகழ்த்துவதும் வழக்கமான செயல்பாடுகளாக அமைவது வழக்கம். எங்களைப் பொருத்த வரையில் சென்னை என்பது அதன் பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே அல்ல. இளம் சென்னையின் உணர்வானது சமூகத்தின் நலனுக்காக தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இதயங்களால்தானே உருவாக்கப்பட வேண்டும்! ஆம்... 2021-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘என் சென்னை யங் சென்னை’ கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் இதுதான். சென்னையின் நினைவுச் சின்னங்களையும், சென்னையின் எழிலையும் கொண்டாடுவது அவசியம்தான். அதைவிடவும் சென்னை மனிதர்களைக் கொண்டாடவே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். இந்தப் பின்னணியில்தான் சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் நீங்களும் நாங்களும் இணைந்து சென்னைக்கு சிறப்பு செய்யும் திருவிழாவாக  ‘என் சென்னை யங் சென்னை’ உருவெடுத்திருக்கிறது.

 

கடந்த ஆண்டு... வந்தாரை வாழவைக்கும் சென்னையின் பெருமையைக் கூறும் சென்னை கீதத்தை அறிமுகப்படுத்தினோம். அதோடு, ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த சென்னை இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளைப் போற்றும் விதமாக விருதுகளை வழங்கினோம். சென்னையின் உதவிக்கரமாக நீளும் இந்த இளைஞர்களுக்கு மரியாதை செய்யும் விருதுகள் சென்னைக்காக - சென்னையால் - சென்னைக்கு என்கிற கோணத்தில் அளிக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் உரிமைகளுக்காக போராடுவது, சுற்றுச்சூழல் காப்பது, இயற்கைச் சீற்றங்கள், தொற்றுநோய் போன்ற எதிர்பாரா சூழல்களின்போது சவால்களை எதிர்கொண்டு, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுவதன் மூலம், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, சென்னையை மீட்டெடுத்தவர்களை இந்த விருதுகள் மூலம் அடையாளப்படுத்தும் நல்வாய்ப்பு எங்களுக்கு வாய்த்தது.

 

இந்த ஆண்டு ஜூன் 25-ம் அன்று தொடங்கும் ‘என் சென்னை யங் சென்னை’ விழாவை, 50 நாள்களுக்குத் தொடரவிருக்கிறோம். இன்று முதல் ஒவ்வொரு நாளும் சென்னையை நாம் இணைந்து கொண்டாடுவோம்... வாருங்கள்! 

 

சென்னையின் மனித மதிப்பீடுகளை (Human Values) உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு குடியிருப்புகளிலும் ‘என் சென்னை யங் சென்னை’ இடம் பிடிக்கும். ஒரு மாபெரும் நிகழ்வாக இன்டோர் ஸ்டேடியம் மாரத்தான் ஓட்டம் நடைபெறவிருக்கிறது. பெருமைமிக்கதொரு விருது விழாவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டைப் போலவே சமூகப் பணிக்கான விருதுகளோடு, இந்த ஆண்டு இன்னும் இரு பிரிவுகளும் இடம்பெறுகின்றன. வணிகத் துறை சாதனையாளர்கள் மற்றும் பொழுதுபோக்கின் புதிய முகங்களும் இந்த ஆண்டு கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

 

சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் இந்த ஆண்டின் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதன்மையாகத் திகழ்கிறது. எவ்வித அச்ச உணர்வும் இன்றி நாம் மகிழ்ச்சியாகவும் பத்திரமாகவும் வாழ்வதற்கு காவல் துறையின் சீரிய பணியே காரணம் என்பதை நாம் தொடர்ந்து உணர்ந்து வருகிறோம். சென்னையை பாதுகாக்கும் காவல் துறை ஆணையர் இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது. சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்களுக்கு ‘என் சென்னை யங் சென்னை’ குழு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.