Skip to main content

சென்னை- கோவை சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுகிறது...

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

 

chennai to coimbatore satabdi trains service stop southern railway decision

 

 

சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவம்பர் 30- ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

செவ்வாய்கிழமையைத் தவிர வாரம் ஆறு நாட்களும் இயங்கி வந்தது சதாப்தி ரயில். பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சதாப்தி விரைவு ரயில் நவம்பர் 30- ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மின்சார ரயில் பயணிகளின் கவனத்திற்கு’ - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Attention Electric Train Passengers Southern Railway Important Notice

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி தொடர்ந்து 3 வது வாரமாக நாளை மறுநாளான (25.02.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரத்திற்கு 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை  செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மறுநாள் பயணிகள் தேவைக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளையும் கூடுதலாக இயக்கவும் தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
44 electric trains canceled in Chennai

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ஒரு ரயிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 15 ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை, செல்லும் 5 ரயில்கள், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ஒரு ரயிலும், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ஒரு ரயிலும் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.