Skip to main content

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி கோரி இன்று (05.04.2023) பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பல்கலைக்கழகத்தில் துறை வாரியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். முனைவர் ஆய்வு படிப்புக்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். ஆய்வு மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் இரவு 9 மணிக்குள் விடுதிக்கு வர நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
College student passed away in sea waves

சிதம்பரம் அடுத்த மஞ்சகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மகன் அன்பரசன்(22). பொறியியல் பயின்று வருகிறார்.  அவருடன்  அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் 21, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை குளித்து கொண்டிருந்தனர். இதில் அன்பரசன் எதிர்பாராதவிதமாக  கடல் அலையில் சிக்கியுள்ளார்.

உடனடியாக அவரது  நண்பர்கள் கடல் அலையில் சிக்கியவரை  மீட்டு இருசக்கர வாகனத்தில் பி.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என உறுதிபடுத்திய நிலையில் அவரது சடலத்தை  வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் சுஜாதா சடலத்தை  மீட்டு உடற் கூறாய்வுக்கு அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“மாணவர்களின் கவனத்திற்கு” - அரசு போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
“Attention Students” - State Transport Corporation Important Instruction!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதாவது வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 ஜுன் 10 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் 2023-24 கல்வியாண்டில் வழங்கப்பட்ட பயண அட்டை மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். 

“Attention Students” - State Transport Corporation Important Instruction!

அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ - மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி கல்விதுறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ - மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்  - ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.