Skip to main content

நாளை சுய ஊரடங்கு! சொந்த ஊர் திரும்ப அலைமோதும் கூட்டம்! (படங்கள்) 

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை காலை முதல் மாலை வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்கவிருப்பதால் இன்றே வீடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒரே நாளில் பெரும்பாலானோர் ஊர்களுக்கு செல்வதால் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Train derailment accident in Chennai
மாதிரிப்படம்

சென்னை சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நள்ளிரவு 01.15 மணி முதல் அதிகாலை 3 மணிவரை  நடைபெற்றது. ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.