Skip to main content

இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி!

Published on 06/03/2022 | Edited on 06/03/2022

 

Chennai Book Fair ends today!

 

கடந்த பிப்.16 ஆம் தேதி துவங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி இன்று நிறைவு பெற உள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகப்படியான மக்கள் புத்தங்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். மொத்தம் 700 அரங்குகள், 500 பதிப்பாளர்கள் என இந்த வருடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்திருந்தது. எப்பொழுதும் 14 நாட்கள் மட்டுமே நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த வருடம் 19 நாட்கள் நடைபெற்றது.

 

சுமார் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தமுறை ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்தமுறை 15 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்கும் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடம் அம்பேத்கர், பெரியார், ஆன்மீகம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆனதாக பபாசி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் வாசிப்பு நிகழ்வு (படங்கள்)

Published on 12/01/2024 | Edited on 12/01/2024

 

 

 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் ஜனவரி 12 காலை 10.30 மணிக்கு புத்தகக் காட்சி அமைந்துள்ள வளாகத்தில் 4000 பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை மாநகர மேயர் இரா. பிரியா, திரைக்கலைஞர் ரோஹிணி, பத்திரிகையாளர் நக்கீரன் ஆசிரியர், சுஜித் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story

சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Chennai Buddh Show will not be held today

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் காட்சியானது ஜனவரி 21 ஆம் தேதி (21.01.2024) வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை புத்தகக் காட்சி இன்று ஒருநாள் மட்டும் (08.01.2024) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்பு காரணமாக புத்தக அரங்குகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புத்தகக் காட்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நாளை முதல் (09.01.2024) புத்தகக் காட்சி வழக்கம் போல் செயல்படும் எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.