p

சென்னை புத்தகத் திருவிழாவின் ’எழுத்தாளர் முற்றம்’ அரங்கில், ’படைப்புக் குழுமத்தின்’ புத்தக வெளியீட்டு விழா சிறப்புற நடந்தது.

Advertisment

கவிஞர் கலாப்பிரியாவின் தலைமையில், படைப்புக் குழும நிறுவனர் ஜின்னா அஸ்மி முன்னிலையில், கவிஞர் விக்கிரமாதித்யனின் ’இடறினும் தளரினும்’ கவிஞர் ஆண்டன் பெனியின் ’நிறமி’ மற்றும் யமுனா என்றொரு வனம், ’இந்த பூமிக்கு வானம் வேறு’. காவல்துறை அதிகாரியும் கவிஞருமான மணி சண்முகத்தின் ‘கன்னத்துப்பூச்சி’ ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் கலைவிமர்சகர் இந்திரன், இயக்குநர் பிருந்தாசாரதி, ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை கவிஞர் ரூபஸ் ஆண்டனி, அழகாகத் தொகுத்து வழங்கினார். ’டிஸ்கவரி பேலஸ் ’, கவிஞர்கள் சலீம்கான், கடையநல்லூர் பென்ஸி, தமிழ் மணவாளன், நா.வே.அருள், ஸ்டெல்லா தமிழரசி, கனகா பாலன், அமுதா, லட்சுமி, உள்ளிட்ட ஏராளமான படைப்பாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Advertisment