Skip to main content

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை

 

chennai arumbakkam retired police inspector wife incident 

 

சென்னை அரும்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளரின் மனைவி ஆவார். கணவர் சில வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி தனது குடும்பத்தினர் உடன் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் வீடு வாடகைக்கு உள்ளதா எனக் கேட்டுள்ளனர். மேலும் பேச்சு கொடுத்தபடியே மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்தவர்கள் திடீரென மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நிர்வாண நிலையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும் நிர்வாண நிலையில் பாட்டியை புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

மர்ம நபர்கள் தப்பி சென்றதை தொடர்ந்து கத்திக் கூச்சலிட்ட மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதனால் அவருடன் தொழிலில் ஏற்பட்ட போட்டியில் அவரை அவமானப்படுத்த நினைத்து இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !