Skip to main content

கஞ்சிக்கே வழியில்லை!! நடந்தே மதுரைக்குப் போறேன்!! நடந்தே திருச்சிக்குப் போறேன்!! பணம் வசூலிக்காமல் திறந்துவிடப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி!

Published on 18/06/2020 | Edited on 19/06/2020

 

chengalpet paranur toll gate


சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஜூன் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் ஊரடங்கு என்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உள்பட பலர் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியபோதே சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சாரை சாரையாக மக்கள் சென்றனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சென்னையிலேயே இருந்த மக்களுக்கும் வேலைவாய்ப்பு போதிய வருமானம் இல்லாமல் கடும் சிரமத்தில் இருந்தனர்.

 

தற்போது மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு என்றதும், வருமானம் இல்லாமல் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, மளிகைப் பொருட்கள் வாங்க முடியவில்லை. கஞ்சிக்கே கஷ்டமாக இருக்கிறது என சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். சுங்கச்சாவடியில் எப்படியும் பேசி போய்விடலாம் எனச் சிலர் இ-பாஸ் இல்லாமல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு காரில் வந்தடைந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அனுமதிக்க முடியாது என்றனர். போலீசார் சோதனை செய்வதால் காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானது. இரண்டு, மூன்று கிலோ மீட்டருக்குத் தாண்டி நின்றது.

 

இதையடுத்து கட்டணம் வசூலிக்காமலேயே சுங்கச்சாவடி திறந்துவிடப்பட்டது. கார்கள் நிற்காமலேயே பறந்தன. இருசக்கர வாகனங்களில் குடும்பம், குடும்பமாக சொந்த ஊருக்கு மக்கள் செல்கின்றனர். இதனிடையே சென்னையிலிருந்து சிலர் நடந்தே பரனூர் சுங்கச்சாவடியை வந்தடைந்துள்ளனர். விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் நடந்தே இந்த இடத்திற்கு வந்து, போகும் கார், லாரி, பைக்குகளில் தங்களை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்ட காட்சிகளையும் பார்க்க முடிகிறது பரனூர் சுங்கச்சாவடியில். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.