Skip to main content

சப்பரம் சாய்ந்து விபத்து; ஒருவர் காயம்

 

 Chaparam tilting accident; One is injured

 

கடலூரில் கோவில் திருவிழாவின் போது பக்தர்களால் இழுத்து வரப்பட்ட சப்பரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் தெற்கு பெரியார் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் உற்சவத்தின் போது சப்பரம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது திடீரென சாலையோரத்தில் இருந்த மாமரத்தின் போது மோதி சப்பரம் தலைகீழாக கவிழ முயன்றது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் சூழ்ந்து கொண்டு சப்பரத்தை நிறுத்த முயன்றனர். இந்த விபத்தில் நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தேர் வீதி உலா நடைபெற்றது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !