Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Chance of rain in 15 districts in next 3 hours

 

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று சென்னை வருகை 

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Central team to visit Chennai today to inspect flood damage

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு என பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் முதல் கட்ட நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 5,060 கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஒரு குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

Next Story

உதகை மலை ரயில் சேவை ரத்து!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Uthagai Hill train service canceled

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மழை காரணமாக  ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை ரயில் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.