Chain stolen from woman in Coimbatore

Advertisment

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவரது கணவர் ஆனந்தவேல். இவர்கள் கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில்வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டுதங்களது டூவீலரில் வீட்டுக்குத்திரும்பியுள்ளனர். அந்த சமயம், குஷ்பூ அணிந்திருந்த தாலி சங்கிலியை நோட்டமிட்ட 2மர்ம நபர்கள், அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

ஆனால், அதற்குள் ஆனந்தவேல் - குஷ்பூ தம்பதி தங்களது இல்லத்தை அடைந்துவிட்டனர். இதையடுத்து, ஆனந்தவேலின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்கும் நேரத்தில்மற்றொருவர் அங்கிருந்த குஷ்பூவிடம் சென்று விலாசம் கேட்பதுபோல் நைஸாக பேசியுள்ளார். அதற்கு குஷ்பூ பதிலளிக்க துவங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த நாலரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

ஒரு கணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பூ, சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அக்கம்பக்கத்தினர்அந்த கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையில், பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பதும்கூலித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், டூவீலரில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கோவையில் உள்ள முக்கியப் பகுதியில் நடக்கும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களால்அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.