Skip to main content

வினோஜ்.பி செல்வத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த ஸ்மிருதி இரானி! (படங்கள்)

Published on 27/03/2021 | Edited on 28/03/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

அந்தவகையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று (26/03/2021) தமிழகம் வந்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைப்போல், இன்று துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ்.பி செல்வத்தை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பூக்கடைப் பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்மிருதி இராணிக்கு போட்டியாக பிரியங்கா காந்தியின் கணவர்?

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Priyanka Gandhi's husband to compete with Smriti Rani?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். ஆனால், அதே வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமேதி தொகுதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டு விட்டார்கள். அமேதியின் தற்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி ராணியை தேர்ந்தெடுத்தற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். 

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்.பி.யாக வேண்டும் என்று அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் இணைந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

2004, 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இந்துக்களின் படுகொலைக்கு பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி” - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆவேசம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
"Mamata Banerjee is known for massacre of Hindus" - Union Minister Smriti Rani Awesam

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் தங்களது நிலத்தைப் பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்தப் பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர். 

மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர் ஷிபோ பிரசாத் ஹஸ்ராவின் வீட்டை அங்குள்ள உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டம் வலுத்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “மம்தா பானர்ஜி, இந்துக்களின் படுகொலைக்கு பெயர் பெற்றவர். திருமணமான இளம் இந்து பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய தனது ஆட்களை மம்தா பானர்ஜி அனுமதிக்கிறார். 

பெங்காலி இந்து பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேஷ்காலி பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்த மனிதர் யார்? ஷேக் ஷாஜகான் யார் என்று இப்போது வரை அனைவரும் யோசித்து வருகின்றனர். இப்போது, இந்த கேள்விக்கு மம்தா பானர்ஜி பதிலளிக்க வேண்டும்.” என்றார்.