Skip to main content

“நீட் தேர்வால் பயனில்லை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

 central government has admitted that NEET is useless says CM Stalin

 

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நீட் = பூஜ்யம்; நீட் தேர்வால் பயனில்லை என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப்  பூஜ்ஜியமாக குறைப்பதன் மூலம் நீட் தேர்வில்  தகுதி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. பயிற்சி மையத்திற்காவும், பணத்திற்காகவுமே நீட் தேர்வு.  தகுதிக்கும், நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை. விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; 100 பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
BJP workers arrested for struggle in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் எனவும் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனப் போக்கே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சா சாராயம் போன்ற போதைப் பொருட்களின் ஊடுருவல் அதிகமாக இருப்பதாகவும் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தால் பலியானவர்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வந்தவர்களை மறித்து போலீசார் பாஜக நிர்வாகிகளை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் குண்டு கட்டாக கைது செய்து மண்டபத்தில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வேனியல் ஏற்றி அனுப்பினர். பாதுகாப்பு பணிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு ஏடிஎஸ்பி மற்றும் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற  அமைச்சர் ஐ.பெரியசாமி!  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin
கோப்புப்படம்

கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து  நேற்று  சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய  கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான  ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி  செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை  வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Minister I. Periyasamy congratulated the Chief Minister mk stalin

அதன்பின் சரியாக 8.15 மணிக்க  அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு  கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய  கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில்  தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார்.