சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாக, வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க, மத்திய அரசு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவிடத்திற்கு அருகே வங்கக்கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
கலைஞரின் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் அமைத்து, பேனா நினைவுச் சின்னத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதை அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி மட்டுமே என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள், இன்னும் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டியிருப்பதாகக் கூறினர்.