Skip to main content

'வலிமை வந்தால் விலை குறையும்' - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Cementprices will go down' - Minister

 

கடந்த 7ஆம் தேதி தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

 

அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிமெண்ட் மூட்டையின் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் நிலை உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலையேற்றம் என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

Cementprices will go down' - Minister

 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் 'வலிமை' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், வலிமை சிமெண்ட் அறிமுகமாகி வெளியே வந்தால் சிமெண்ட் விலை குறையும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “சிமெண்ட் விலையை மேலும் 20 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. சிமெண்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிமெண்ட் மூட்டை விலை தற்போது 420 ரூபாயிலிருந்து 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வலிமை சிமெண்ட் மாதம் ஒன்றிற்கு 30 ஆயிரம் மெகா டன் விற்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பரிசு அறிவிப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Announcement of prize for the Indian cricket team on behalf of Maharashtra govt

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024)  டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Discovery of pots with fish motifs on the bottom!

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்புரம் சிவப்பு வண்ணப்பூச்சு பெற்ற பளபளப்பான பானை ஓடுகளில் இம்மீன் உருவங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. பகுதி உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள மீன் உருவம் பொறிக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் நீளம் மற்றும் அகலம் முறையே 4X 5 செ.மீ மற்றும் 4 X3 செ.மீ ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 

Discovery of pots with fish motifs on the bottom!

முன்னதாக, ‘கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் இராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

The website encountered an unexpected error. Please try again later.