Skip to main content

நீர் ஆதாரங்களை அழிக்கும் சிமென்ட் ஆலை... புதுப்பாளையம் மக்கள் போராட்டம்!

Published on 28/11/2020 | Edited on 29/11/2020

 

 Cement plant destroying water resources ... Pudupalayam people's struggle!


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி ஊராட்சியில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில், ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், சுண்ணாம்புக் கல் சுரங்கம் வெட்ட, அந்தப் பகுதியில் உள்ள நீரோடைகள், குவாரிகள், கோயில் மானிய நிலங்கள், சிறு குட்டை, குளங்களைக் கணக்கில் காட்டாமல், மூன்று வருடங்களுக்கு முன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. 

 

அந்தப் பகுதியில், சுமார் 120 அடி ஆழத்திற்கு மணற்பாங்கான பகுதி உள்ளது. இந்நிலையில், சுண்ணாம்புக் கல் சுரங்க ஆழம் 300 அடிக்கு மேல் செல்லும் எனக் கூறுகிறார்கள். இதனால், அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

 

இவ்வளவு பாதிப்புகளையும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தோலுரித்ததால், இதுவரை அவர்களால் சுரங்கம் வெட்ட முடியவில்லை. நீர்வழிப் பாதைகள், கோயில் மானிய நிலங்கள், குட்டைகளை  ஆக்கிரமித்து எல்லைக்கல் நடுதல், வேலி அமைத்தல் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த புதுப்பாளையம் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, களத்தில் இறங்கிப் போராடி வருகின்றனர்.  

 

சிமென்ட் ஆலை நிறுவனர்கள் ஓடி ஒளிவதும், மீண்டும் வந்து மக்களைச் சீண்டுவதுமாய் உள்ளனர். அரசு அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே தொடர் போராட்டமே தீர்வாக இருக்கும் என்கின்றனர் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.

 


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

20 அடி நீள ரோஜா பூ மாலை; 224 சீர்வரிசை தட்டுகள் - அசத்திய தாய்மாமன்  

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
20-feet-long Rose Hill is  mother-in-law that comes with 224 consecutive plates

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பு மற்றும் பிரேமா தம்பதி. இவர்களுக்கு சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுபஸ்ரீக்கு  மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் வீட்டு சீராக 20 அடிநீளம் கொண்ட 40கிலோ எடையுள்ள ராட்சத ரோஜா பூ மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வரப்பட்டது.

ரோஜா பூ மாலையும் சுமார் 224 சீர்வரிசை தட்டுகளும் கேரளா செண்டை மேளங்கள் முழங்க அந்த கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துவரப்பட்டு அந்த கிராமமே வாய் மேல் கை வைக்கும் அளவிற்கு மிக பிரமாண்டமாக இருந்தது. ஆடல் பாடலுடன் பெண்களின் குத்தாட்டத்துடன் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் கிராமம் முழுக்க சுற்றி வந்த பிறகு ராட்சத ரோஜா பூ மாலை ஒன்று ஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டுவரப்பட்டது. அந்த ராட்சத ரோஜா மலையை சுபஸ்ரீயின் தாய்மாமன்கள் முருகன், மாயவன், பாண்டியன், ஐயப்பன், சின்னதுரை ஆகியோர் ராட்சத ரோஜா மாலையை தாய்மாமன் வீட்டு சீராக மாலையை அணிவித்தனர். 

இதுவரையில் இதுபோன்று ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத ரோஜா மலையை யாரும் சீர்வரிசையாக கொண்டு வந்ததில்லை எனவும் 224 சீர்வரிசை தட்டுகளை யாருமே எடுத்து வரவில்லை எனவும் சங்கராபுரம்  சுற்றுவட்டார பகுதி வாழ் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

Next Story

பட்டா மற்றும் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Demonstration by hill people to issue badges and certificates

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு பழங்குடி மக்கள் வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சாதி சான்றிதழ் கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து கோசமிட்டபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் பொதுமக்கள் கோட்டாட்சியர்  அலுவலகத்துக்கு முன்பு நின்றபடி மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பரிசளித்து உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தக் கண்டன கோஷத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர்.