Skip to main content

பேண்ட்டில் வைத்திருந்த போது வெடித்த செல்போன்; மாணவருக்கு தீவிர சிகிச்சை

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

A cell phone that exploded while in his pants

 

ராணிப்பேட்டை அருகே உள்ள கொண்டகுப்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது பேண்ட் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் மாணவர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பத்தில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் முனியாண்டி. இவரது மகன் முத்து. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் இவர் ஆன்லைன் கல்விக்காக 4 மாதங்களுக்கு முன்பு 12000 ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். 

 

இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது பேண்ட் பைகளில் வைத்திருந்த செல்போன் வெடித்தது. இதனால் அவர் அணிந்திருந்த உடைகளில் தீபற்றி எரிந்தது. காயமடைந்த இளைஞரை அப்பகுதியில் இருந்தவர்கள் வாலஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்ற மணீப்பூர் நீதிமன்றம்; குண்டுவெடிப்பால் மீண்டும் பதற்றம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Manipur court withdraws controversial verdict but Tension again due to the incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதாவது பழங்குடியின பட்டியலில் மைத்தேயி சமூகத்தினரை இணைக்க மாநில அரசுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை நீக்கம் செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், மணிப்பூரின் தனமஞ்சூரி எனும் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (23-02-24) இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தால், சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கலவரத்துக்கு காரணமாக அமைந்த தீர்ப்பை, நீதிமன்றம் திரும்பப் பெற்ற அடுத்த நாளிலேயே நடந்த இந்த வெடிகுண்டு சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்; பாதுகாப்பு வீரர் பலி

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

The security guard was lost his life for  Chattisgarh blast

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (17-11-23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதேபோல் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்தியப் பிரதேச போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாவட்டம் கரியாபந்த்தில் நக்ஸ்லைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அங்கு அதிகப்படியான எல்லை பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் கரியாபந்த் தொகுதியில் பாதுகாப்பு வீரர்கள் மத்தியில் தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்தோ திபெத்திய எல்லை பிரிவைச் சேர்ந்த ஜொகிந்தர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற போது வெடிக்குண்டு தாக்குதல் நடந்ததில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.