Skip to main content

கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை (படங்கள்) 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்து வருகிறது.

 

சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அவரது தந்தை ப.சிதம்பரத்தின் வீடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தனியார் காம்ப்ளக்ஸ் கட்டடத்தில் இயங்கி வரும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் ஶ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் ரெய்டு நடக்கும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.