தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி ஐஜி உயிரிழந்தஜெயராஜ், பென்னிக்ஸ்ஆகியோரின் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தத ஐஜி சங்கர் கூறுகையில், “சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லதுஇன்று இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும். சாத்தான்குளம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படவுள்ளது. 12குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான விசாரணையைபல கோணங்களில் மேற்கொண்டு வருகிறோம்என்றார்.
பென்னிக்ஸின்செல்போன் கடைக்கும் நேரில் சென்று சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த,வழக்கில் சாட்சியம் அளித்தபெண் காவலரிடம், சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்பாக அவர் கோவில்பட்டி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளை சிறையிலும் சென்று ஆய்வு நடத்தி விசாரணைமேற்கொண்டார். அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையமும் சிபிசிஐடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.