Skip to main content

காவிரி நமக்கு அரசியல் அல்ல... வாழ்வாதாரம்!- தமிமுன் அன்சாரி உரை!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
 Cauvery is not political ... Livelihood

 

மே 7 அன்று மாலை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உரிமையை வலியுறுத்தியும், மத்திய அரசு தன் ஜல்சக்தி துறையின் கீழ் அதை  கொண்டு வருவதை எதிர்த்தும், பதாகை ஏந்தி வீட்டு வாசலில் 10 நிமிடங்கள் நிற்பது என்றும் அதை சமூக இணையங்களில் பதிவிட்டு பரப்புரை செய்வது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு சீமான், தனியரசு, வேல்முருகன், கருணாஸ், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயகுமார், பேரா.ஜெயராமன், காவிரி தனபாலன்  உள்ளிட்டோரும், பல விவசாய அமைப்புகளும், மஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இப்போராட்ட ஆயத்தம் குறித்து மஜகவின் டெல்டா மாவட்ட செயலாளர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று உரையாற்றினார்.

அவர்களிடம் பேசிய  அவர், காவிரி நமக்கு அரசியல் அல்ல, வாழ்வாதாரம் என்றும் காவிரி நீர் நமக்கு விவசாயம், குடிநீர் என பல வகை பயன்பாடு கொண்டது என்பதால் அது நம் வாழ்வாதாரம் என்றும் கூறினார்.

 

 


சென்னை முதல் ராமநாதபுரம் வரை குடிநீர் விநியோகத்திற்கும் காவிரி நீரே பயன்படுகிறது என்றும், 20 மாவட்டங்கள் வரை பல வகையிலும் காவிரி நீர் பயன்படுவதால், இது தமிழக மக்களின் பிரச்சனை என்றும் கூறினார்.

எனவே காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும் இப்போராட்டத்தில் மஜக முழு வீச்சில் ஈடுபடும் என்றும், நாளைய போராட்டத்தில் திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மஜகவினர் வீட்டு வாசலில் நின்றவாறு மத்திய அரசுக்கு எதிராக பதாகை ஏந்தி நிற்பார்கள் என்றும் கூறினார்.

 


இதற்காக  விவசாய அமைப்புகள் யார் போராட்டம் நடத்தினாலும் மஜக அவர்களுடன் களம் காணும் என்றும் கூறினார்.

டெல்டா பகுதியில் உள்ள மாநில துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் அவர்கள் இப்போராட்ட குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.