Skip to main content

‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் முந்திரி, திராட்சை காணல... கரும்பு கூட கிடைக்கல..’ - ரேஷன் அட்டைதாரர்கள் புகார்..!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

cashews and grapes not in the Pongal gift package ... Sugarcane is also didn't  available ..; Ration card holders complain ..!
                                                    மாதிரி படம் 


சேலத்தில், பொங்கல் விழாவையொட்டி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பரிசுத்தொகுப்பில் பலருக்கு முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை விடுபட்டுள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் கிளப்பியுள்ளனர்.

 

தமிழகத்தில் பொங்கலையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

மாநிலம் முழுவதும் 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 10.12 லட்சம் அட்டைதாரர்களுக்கு 1,583 ரேஷன் கடைகள் மூலம் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில், விடுபட்ட கார்டுதாரர்களுக்கு ஜன.18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல ரேஷன் கடைகளில் பச்சரிசியும், சர்க்கரையும் மட்டும் வழங்கப்படுகிறது என்றும், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் மக்களிடம் பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

சேலத்தில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பரவலாக இப்பிரச்சனை எழுந்துள்ளது. ரேஷன் ஊழியர்கள் தரப்பில் கேட்டபோது, “கரும்பு போதிய அளவில் லோடு வரவில்லை என்பதால் பொங்கல் பொருள்கள் மற்றும் ரொக்கத்தை மட்டும் கொடுத்து அனுப்பினோம்” என்றனர். மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு அடங்கிய பைகள் சிலவற்றில் முந்திரி, திராட்சை பொட்டலங்கள் போடப்படாமல் விடுபட்டுள்ளது. “எங்களுக்கு என்ன சரக்கு அனுப்பி வைக்கப்பட்டதோ அதைத்தான் கொடுக்கிறோமே தவிர, அவற்றில் ஒன்றிரண்டு காணாமல் போனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது,” என புலம்பினர்.

 

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத்தொகுப்பு முழுமையாக விநியோகம் செய்யும்படிதான் ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில பரிசுத்தொகுப்பில் முந்திரி, திராட்சை அல்லது கரும்பு விடுபட்டு இருந்தால் அதுகுறித்து உயரதிகாரிகளுக்கு உரிய தகவல் அளித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சப்ளை செய்யப்படும். இது தொடர்பாக புகார் வராதபடி ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரேசன் கடையில் கை விரல் ரேகை பதிவு விவகாரம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Fingerprint registration issue at ration shop TN Govt Order

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Incentive announcement for fair price shop employees!

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் களப் பணியாற்றினர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.