Case seeking subsidy for handloom upgrade automatic loom!

சர்வதேச அளவில், துணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில், கைத்தறி உற்பத்தியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வகையில், விசைத்தறியை தானியங்கி விசைத்தறியாக மாற்றுவதற்கு மானியம் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

Advertisment

மத்திய அரசின், இந்த மானியம் பெறுவதற்காக விசைத்தறி நெசவாளர்கள் அளித்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த ஜவுளித்துறை இணை இயக்குனர், தறி நெய்யும் இடங்களை நேரடியாக ஆய்வு செய்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். ஆனால், இந்த விண்ணப்பங்கள் மீது கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மானியமும் வழங்கப்படவில்லை என, கோவையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின்படி, தானியங்கி விசைத்தறி மானிய திட்டத்தை அமல்படுத்தம் மத்திய அரசு 2020-21ஆம் ஆண்டிற்கு 7 கோடியே 69 லட்ச ரூபாயை ஒதுக்கி இருப்பதால், மானியம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட வேண்டும்.’ என, மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 4-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, இந்திய ஜவுளித்துறை ஆணையர், கோவை மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisment