Skip to main content

எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
Case registered against SV Sekar!

 

நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சி பெயரை மாற்றி அரசியல் செய்தால் தமிழகத்தில் அதிமுகவிற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கும்” என்றபடி பேசியிருந்தார். 

இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எஸ்.வி. சேகர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூட தெரியாது, அவர் நினைத்ததையெல்லாம் பேசுவார் ஆனால் வழக்குகள் வந்தால் ஒளிந்து கொள்வார் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். 

இந்நிலையில் முதல்வர்  குறித்து அவதூறாகப் பேசியதாக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கத்தில், ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியையும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்நிலையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது தேசிய கௌரவ பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு  வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.