Skip to main content

 90 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 55 லட்சம் ரூபாய் நிலம்; 8 பேர் மீது வழக்கு!      

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

case has been filed against a gang of 8 people who embezzled land of 55 lakh rupees

 

சேலத்தில், 90 ஆயிரம் ரூபாய் கடனுக்காக 55 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பறித்துக் கொண்டதாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

 

சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55). இவர், பிரபாகரன் என்பவரிடம் தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அடமானம் வைத்து, அவசரத் தேவைக்காக 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்கிடையே, பிரபாகரன் போலி ஆவணங்கள் தயாரித்து, கருணாகரனுக்குச் சொந்தமான நிலத்தை தனது தந்தை பெயரில் தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பதிவு செய்து கொண்டார்.   

 

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கருணாகரன், இதுகுறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். 90 ஆயிரம் ரூபாய் கடனுக்காகத் தனக்குச் சொந்தமான 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தைச் சட்ட விரோதமாகத் தன் பெயருக்கு எழுதிக் கொண்டதாக பிரபாகரன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவருடைய தந்தை கந்தசாமி மற்றும் மருத்துவர் கந்தசாமி, ராஜகோபால், பரமசிவம், கலைச்செல்வி, அஜித், பழனியம்மாள் உள்பட 8 பேர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பிரபாகரன் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Bomb threat to 50 hospitals simultaneously; Police investigation

மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை விசாரணையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இந்தநிலையில் தற்போது மும்பையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல் படி மருத்துவமனையின் படுக்கைகள், குளியலறைகளில் வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு விரட்டில் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.