/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DxADadadada.jpg)
பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலகம் செய்யத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று,அவதூறு பரப்புரையில் ஈடுபடுவோரின் கோழைத்தனம் என அவர் விமர்சித்துள்ளார். அதேபோல் திருமாவளவனின்கருத்தை திரித்து இந்துப் பெண்களுக்கு எதிராக சித்தரிக்கபாஜக முயற்சிக்கிறது என த.வா.கவேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)