Skip to main content

சீமைக்கருவேலை மரங்களை அகற்றக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கு! -நிபுணர் குழு அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

தமிழகத்தில் சீமைக்கருவேலை மரங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற நிபுணர் குழுவின் அறிக்கையை, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமைக்கருவேலை மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மரங்களை வெட்ட உத்தரவிட்டது. இந்நிலையில், சீமைக்கருவேலை மரங்களை அகற்றுவதால் ஏற்படும் சூற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

vaiko


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சீமைக்கருவேலை மரங்களை அகற்ற தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேலை மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த அறிக்கையில், சீமைக்கருவேலை மரங்களால் நிலத்தடி நீருக்கும், நீர் பிடிப்பு பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள போதிலும் அறிக்கையின் இறுதியில் கருவேலை மரங்களால் எதிர்மறை பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளதைச் சுட்டிகாட்டி மனுதாரர் தரப்பில் அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

 

vaiko


நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, சீமைக்கருவேலை மரங்களால் மற்ற மரங்களுக்கும், விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளதாகக் கூறினார். மேலும், தென் மாவட்டங்களில் இந்த மரங்களால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்,  இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை,  சுற்றுச்சூழல் ஆய்வுகளில் புகழ் பெற்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமைக்கருவேலை மரத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தனது அறிக்கையையும், மனுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகளையும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து நீரி அமைப்பு அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.