Skip to main content

கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்  

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Case against Gowthama sikamani transferred to special court

 

அமைச்சர் பொன்முடியின் மகன் எம்.பி கவுதம சிகாமணிக்கு எதிரான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு தற்போது எம்.பி, எம்.எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வரும் செப்.11 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கவுதம சிகாமணிக்கு எதிராக முதன்மை நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். அண்மையில் அமைச்சர் பொன்முடியிடமும் எம்.பி கவுதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டது குறிப்பிடத்தகுந்தது.

 

ஏற்கனவே நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓபிஎஸ் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான வழக்குகளை மீண்டும் மறு ஆய்வு செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி மனு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Demanding to conduct UPSC examination in state languages

 

குடிமைப் பணிக்கான தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்விற்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இது குறித்து தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ளதுபோல் அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

“முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - இபிஎஸ் வலியுறுத்தல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

“Case against former DGP Natraj should be withdrawn”- EPS insists

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

அதிமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். நடராஜ் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக் காட்டுகிறது. காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.