
கோப்புப்படம்
ராமநாதபுரத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடைக்குள் கார் ஒன்று புகுந்து விபத்தானது. இந்த விபத்தில் டீக்கடை ஓரத்தில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி வள்ளி (69) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல் இந்த சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய ஓடிய நாராயணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். டீக்கடையில் கார் புகுந்து மூதாட்டி உயிரிழந்த உயிரிழந்த சம்பவம் கீழக்கரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.