Skip to main content

சடலம் ஏற்றிச் சென்ற அமரர் ஊர்தி எரிந்து நாசம்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

புதுக்கோட்டை மாவட்டம்  ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அகத்தியன் (வயது50). வேலைக்காக கரூர் சென்றவர்  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தார். தகவல் அறிந்து உறவினர்கள் கரூர் சென்று அகத்தியன் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அரசு அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

 

car fire accident in antipatti

 

இந்த நிலையில் கீரனூர் அருகே அகத்தியன் சடலத்துடன் வந்த அமரர் ஊர்தி திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது. ஊர்தியில் தீ பற்றியதைப் பார்த்த வாகனத்தில் இருந்தவர்கள் சடலத்தை இறக்கி சாலையில் வைத்துவிட்டு உயிர் தப்பினார்கள். அதன் பிறகு அமரர் ஊர்தி பலத்த சேதமடைந்தது. அதனையடுத்து மாற்று வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திகள் தீபற்றி எரியும் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நடந்த சம்பவம்; சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த கார்கள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ad

அரியலூர் அருகே உள்ள செட்டி திருக்கோணம்  கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவி செல்வம்பாள். இருவரும் பிரிங்கியம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கருங்காலி கொட்டாய் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராமசாமி  திடீரென சாலையில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராமசாமி மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரை நெய்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்து காரின் பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் விபத்து நடந்த காரின் மீது மோதாமல் இருக்க, தனது காரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருக்க, அவர் கார் மீது ஜெயக்குமார் கார் மோதியுள்ளது. எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. இதனால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக இறங்கி உயிர்தப்பியுள்ளனர்.

இரு கார்களும் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த கார்களின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இதனால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் தப்பிக்க முயன்ற போது, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Next Story

இ.சி.ஆர். சாலையில் கோர விபத்து; 4 பேர் பலி!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Accident in ECR Road four passes away

கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதும், சாலையை மறைத்து சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அடைத்து நிற்பதுமே சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென்றுள்ளனர். இந்த கார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும் போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்ற கார் சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், சீமைக்கருவேல மரங்கள் சாலையில் மறைத்து நின்றதால் இந்த விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இப்படி வளரும் புதர்களை அகற்றாமல் விட்டதால் தான் பாலம் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி 4 உயிர்கள் பலியாகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.