Skip to main content

ஓட்டுநர் உரிமம் எடுக்கும் இடத்தில் விபரீதம்... அலறியடித்து ஓடிய அதிகாரிகள்...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

The car driven by the person who came to get the driving license fell into a ditch ...
                                                      மாதிரி படம் 

 

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள், எல்லீஸ் சத்திரம் அருகே உள்ள மைதானத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் வாகனங்களை ஓட்டி காண்பித்து உரிமம் பெற அனுமதிக்கப்படுகின்றனர். 

 

அந்தவகையில், விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து, பயிற்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொடுப்பதற்காக அந்தப் பள்ளி நிர்வாகி ஒரு காருடன் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வந்தார். 

 

அப்போது வாகன ஆய்வாளர்கள் இரண்டு பேர், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனத்தை உரிமம் பெற வந்த இளைஞர் ஒருவரிடம் கொடுத்து இயக்குமாறு கூறியுள்ளனர். அந்த இளைஞர்  ஓட்டிய அந்த வாகனம் தாறுமாறாகச் சாலையில் சென்றுள்ளது. இதனைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் தங்கள் மீது அந்த வாகனம் மோதாமல் இருப்பதற்காக அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

 

சிறிது தூரம் சென்ற அந்த கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. வாகனத்தை இயக்கிய இளைஞர் காயமடைந்ததை அடுத்து, அவரைக் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த இளைஞர் தப்பித்துவிட்டார். 

 

ஓட்டுநர் பள்ளியில் பயிற்சி வாகனம் கற்றுக் கொள்பவர்களுக்கு, வாகனத்தை ஓட்டி காட்டாமல் உரிமம் கொடுத்திருந்தால், அப்படிப்பட்டவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது எவ்வளவு பெரிய விபத்து ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன ஓட்டிகள் உரிமம் பெறுவதற்காக வரும்போது முறையான ஆவணங்களையும், அவர்கள் சாலை விதிமுறைகளின்படி வாகனங்களைச் சரியாக இயக்குகிறார்களா என்பதையும் நன்கு ஆய்வு செய்த பிறகு உரிமம் தர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.