/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A32.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சருக்கலக்கோட்டை மற்றும் குருந்திரகோட்டை கிராமங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரு பைக்கில் கீரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பனங்குளம் தெற்கு கிராமத்தில் அருகே திருவாரூர் மாவட்டம் முன்னாவல்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனபாண்டி (வயது 24) அறந்தாங்கி நோக்கி ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த சிறுவர்களின் பைக் மீது மோதிய விபத்தில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்தனர்.
ஆனால் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று விட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த காயங்களுடன் கிடந்த 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவர்களின் பைக் மீது மோதி நிற்காமல் தப்பிச் சென்ற கார் ஒரு கி.மீ தூரத்தில் குளமங்கலம் தெற்கு பகுதியில் பஞ்சராகி நின்றுவிட்டது. தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார் பஞ்சராகி நின்ற காருக்கு மாற்று டயர் மாற்றி காரை கைப்பற்றி கீரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)