Skip to main content

'புற்றுநோய் பாதித்த சிறுவன் விஷ ஊசி செலுத்தி கொலை...' மறுத்த தாய்... ஒப்புக்கொண்ட தந்தை!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

cancer child incident... Mother refused .. Father admitted!

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனைத் தந்தையும் உறவினர்களும் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொன்ற சம்பவத்தில் தனியார் ஆய்வக ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சுபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பெரியசாமி-சசிகலா தம்பதியினர். லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 14 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகன் இருந்தான். அண்மையில் மருத்துவ பரிசோதனையில் வண்ணத்தமிழின் காலில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வண்ணத்தமிழின் அப்பா பெரியசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனைச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இருப்பினும் உடல்நலம் குன்றியதால் வண்ணத்தமிழனை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

cancer child incident... Mother refused .. Father admitted!

 

அண்மையில் மிகவும் உடல்நலம் குன்றிய வண்ணத்தமிழ் எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுகையாக ஆகிவிட்ட நிலையில் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டு சீல் பிடித்த நிலையிலிருந்துள்ளார். தினம் தினம் அவதிப்பட்டுவந்த வண்ணத்தமிழன் படும்பாட்டைக் கண்டு மனம் ஒப்பாத  தந்தை பெரியசாமி தனியார் ஆய்வகத்தில் வேலை செய்யும் பிரபு என்பவரை அழைத்து வந்து விஷ ஊசி செலுத்தி மகன் வண்ணத்தமிழை கொன்றதாக ஊர் முழுக்க தகவல் பரவியது.

 

cancer child incident... Mother refused .. Father admitted!


 

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸார் முதல்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் வண்ணத்தமிழின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சிறுவனின் தந்தை பெரியசாமி மற்றும் பிரபு ஆகியோரைப் பிடித்துச் சென்று போலீசார் விசாரித்தனர். சிறுவனின் தாய் சசிகலாவோ தன்னுடைய கணவர் விஷ ஊசி செலுத்தவில்லை என போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் தான்தான் விஷ ஊசி செலுத்த ஏற்பாடு செய்ததாகத் தந்தை பெரியசாமி ஒப்புக்கொண்டார். மேலும், தன் மகன் படும்பாட்டை தன்னால் காணமுடியவில்லை என்பதற்காகத் தனியார் இரத்த பரிசோதனை ஆய்வகம் நடத்திவரும் வெங்கடேஷ் என்பவரை அணுகியுள்ளார் பெரியசாமி. ஆனால் வெங்கடேஷ் இதுகுறித்து தனக்குத் தெரியாது வேண்டுமானால் ஆய்வக உதவியாளராக இருக்கும் பிரபுவைத் தொடர்புகொள்ளுங்கள் எனக்கூறப் பிரபுவைத் தொடர்புகொண்ட பெரியசாமி பிரபுவிடம் எடுத்துக்கூறி மகன் வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி செலுத்தவைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்பொழுது சிறுவனின் தந்தை பெரியசாமி, வெங்கடேஷ், பிரபு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.