Skip to main content

30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த கல்குவாரி தொழிலாளி மரணம்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Calquary worker passed away after falling from a height of 30 feet
மாரிக்கனி

 

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் கல்குவாரி உள்ளது. அந்த குவாரியை குத்தகைதாரர் பவுன் நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த கல்குவாரியில் வேலை செய்த மூன்று பேர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர் இழந்ததாகவும், மற்ற இருவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேத்தூர் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த பவுன் குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் அந்த கல்குவாரியில் தொழிலாளர்கள் கற்களை அடுக்கி வந்துள்ளனர். அப்போது, 30 அடி உயரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜபாளையம், இளைந்திரைகொண்டானைச் சேர்ந்த மாரிக்கனி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மற்றும் சாமிராஜா ஆகியோர் கீழே தவறி விழுந்துள்ளனர். அவர்களில் தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி (வயது 50) சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துமாணிக்கமும் சாமிராஜாவும் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சேத்தூர் காவல்துறையினர் மாரிக்கனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குத்தகைதாரர் பவுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபிரிட்ஜை திறந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மழைக்காலத்தில் ஜாக்கிரதை

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

nn

 

ஃபிரிட்ஜை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது வரகுணராமபுரம். இந்த பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாத நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத் தொழிலாளியான வாணி என்பவர் வழக்கம் போல காலையில் டீ வைப்பதற்காக ஃபிரிட்ஜில் இருந்து பாலை எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி வாணி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கணவர் மாரிமுத்து பலத்த காயமடைந்த வாணியை  உடனடியாக மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வாணி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Next Story

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை - தீபாவளி பரிசு வழங்கிய திமுக எம்.எல்.ஏ

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Thangapandian MLA who gave a gift to destitute children and sanitation workers

 

ராஜபாளையத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கடந்த  85 மாதங்களாக, தான் பெற்றுவரும் எம்.எல்.ஏ. ஊதியத்தை எளிய  மக்களுக்காகச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது,  மூன்று மாதங்களுக்கான தனது எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.3,15,000-லிருந்து, பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகர் Light of  Life குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூர் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். 

 

கடந்த 6  வருடங்களைப் போலவே, இந்த 7-வது ஆண்டிலும் அக்குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடையை அவர்களையே தேர்வு செய்ய வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.  அவர்களிடம் “நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளல்ல; அனைவரது ஆதரவையும் பெற்ற குழந்தைகள். தீபாவளி நாளில் உங்களது ஆசிரமங்களுக்கு நேரில் வந்து உங்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்.’ என்று  உறுதியளித்து அனுப்பிவைத்தார்.   

 

Thangapandian MLA who gave a gift to destitute children and sanitation workers

 

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், தொடர்ந்து 5-வது முறையாக, ராஜபாளையம் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளைச் சேர்ந்த 1006 தூய்மைப் பணியாளர்களுக்கு, பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகளையும், ஆண்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் இனிப்புகளையும் தனுஷ் M.குமார் எம்.பி.யும், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும் வழங்கியிருக்கின்றனர்.