பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்தசட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிறது என்று கூறி இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

 caa issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் இந்த போராட்டத்தை தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்வாறு தடியடி நடத்தப்பட்டதற்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் அதன் ஒருபகுதியாக மதுரை நெல்பேட்டையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.