avadi

சென்னை ஆவடி அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த உயிரிழந்தவரின்உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கியதோடு, தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னை ஆவடியைஅருகேபட்டாபிராம் அடுத்துள்ள அமுதூர்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கார்த்திகேயன். மீன் வியாபாரம் செய்துவந்த கார்த்திகேயன், இன்று மாலை வீட்டிற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, எம்.ஆர்.எஃப் டயர் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று, கார்த்திகேயன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அந்தத் தனியார்பேருந்தை அடித்து நொறுக்கியதோடு, தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆவடி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment