Burning fire ... Firefighters who acted quickly

Advertisment

திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, செவலூர் பிரிவு சாலை அருகே அமைந்துள்ள குப்பைக்கிடங்கு நேற்று இரவு எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் வீசிய காற்றால் தீ வேகமாகப் பரவி குப்பைக்கிடங்கில் பல டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் எரிந்து அதிலிருந்து கிளம்பிய புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்தக் குப்பை கிடங்கிற்கு அருகாமையில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த விபத்து மின்மாற்றிகள் பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர். பல மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்து உள்ள நிலையில் மேலும் சில பகுதிகளில் தீ முழுமையாக அணைக்கப்படாமல் எரிந்துகொண்டே இருந்தது.