Skip to main content

கருகிய நெற்பயிர்; அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Burned paddy crop... Farmer lose their live in shock

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மேட்டூர் அணையிலிருந்து. திறக்கப்பட்ட நீரை ஆதாரமாக  வைத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். தற்பொழுது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக உள்ளது. நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தற்பொழுது நீர் இல்லாததால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நெற்பயிர் கருதியதால் அதிர்ச்சியிலிருந்த விவசாயி, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நாகை மாவட்டம் திருவாய்மூரில் விவசாயி ராஜ்குமார் என்பவர் 15 ஏக்கர் இடத்தில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். விவசாயப் பணிக்காக கூட்டுறவு வங்கியில் 2.5 லட்ச ரூபாய் விவசாயக் கடன், எட்டுக்குடியில் மூன்று லட்ச ரூபாய் கடன், உள்ளூரில் இரண்டு லட்சம் என கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் பயிர் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்த அவர், தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்த புயல்; 8 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 The Calming Storm; Fishermen who went to the sea after 8 days

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

இந்தநிலையில் 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர். நாகையில் அக்கரைப்பேட்டை,கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீன் பிடிக்க தேவையான வலைகள், டீசல், ஐஸ் கட்டி, உணவு பொருட்கள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட மீனவர்கள், எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். நாகை மட்டுமல்லாது கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

 

 

 

 

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.