Skip to main content

அடக்கம் செய்யப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Buried woman comes back alive causing stir

 

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் சந்திரா என்ற பெண், மகனின் பராமரிப்பில் உள்ளார். இவருக்கு வயது 72. இவர் அடிக்கடி சிங்கப்பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார்.

 

அவர் கோவிலுக்குச் செல்வதாக சொல்லிச் சென்ற சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. ரயில் மோதி இறந்ததாக சொல்லப்பட்டது. இறந்தவர் சந்திராவை போல் இருந்ததால் ஊர்மக்களும் உறவினர்களும் சந்திரா தான் இறந்து விட்டதாக நினைத்து உடலைப் பெற்று அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் புதன் கிழமை காலை சந்திரா கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இறந்தவர் உயிருடன் வந்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சந்திராவின் உடல் எனக் கருதி யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் மழை; 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
nn

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, திண்டுக்கல், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.