ri

அரசு உதவி பெறாத பள்ளிகள் சொத்து வரி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு உதவி பெறாத பள்ளிகள் சொத்து வரி செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி 25ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாண்ட்போர்ட் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ப்பி.ட்டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விலக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு சொத்து வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து 2 வாரங்களில் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சொத்துவரி நோட்டீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.