Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் மயமான மணப்பெண்; திடீர் மணப்பெண்ணுடன் நடந்த திருமணம்

Published on 18/09/2023 | Edited on 20/09/2023

 

bn

 

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் வெளியேறியதால் உறவினர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புத்தாண்டு குப்பம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இருதரப்பு உறவினர்களும் பெற்றோர்களும் சேர்ந்து பேசி முடித்து நிச்சயம் திருமணம் செய்யப்பட்டது. அதன்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற இருந்தது. இருவீட்டு பெற்றோர்களும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு முதல் நாளே வந்துவிட்டனர்.

 

திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்நாள் இரவு திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேடை ஏறிய மணமக்களை உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்தனர். மணமகள் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்திலே தங்கி இருந்தனர். காலையில் தாலி கட்டும் நேரம் நெருங்கியதை அடுத்து பெற்றோர்களும் உறவினர்களும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக அதிகாலை 4 மணி அளவில் மணமேடைக்கு மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வருவதற்காக அவரது அறைக்கு சென்றனர்.  அங்கே மணப்பெண்ணை காணவில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

பல இடங்களில் மணப்பெண்ணை தேடி அலைந்தனர். மணப்பெண் கிடைக்கவில்லை. மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும் அதனால் மணமகள் மண்டபத்தில் இருந்து காணாமல் போனதாக தெரிய வந்தது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் எங்கே போனார் என்று மணமகன் வீட்டார் கேட்க, இரு வீட்டு உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அங்கிருந்த இருதரப்பு முக்கியஸ்தர்களும் அவர்களை அமைதிப்படுத்தினர். அடுத்து அங்கு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் பெண்ணை பேசி முடித்து அதே மண்டபத்தில் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். உடனடியாக அந்த பெண் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அந்த திடீர் மண பெண்ணுக்கும் மாப்பிள்ளை எதிர்பாராத திருமணம் நடந்தது. அதன் பின்னர் திருமண மண்டபத்தில் அமைதி திரும்பியது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் விருந்து சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

MLA Ayyappan inspects the work of construction of retaining wall in Thenpennai river

 

மழைக்காலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது கடலூர் பகுதியில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீரை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அந்த கோரிக்கையை பரிசளித்த முதல்வர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் கரையில் 16 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமாகவும் தொய்வின்றி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கம்மியம் பேட்டை சாவடி அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்றும், கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் மணிவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா, ஆறுமுகம், சுமதி, ரங்கநாதன், சரத் தினகரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Communist Party struggle in Cuddalore
கோப்புப்படம்

 

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுத்தூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை ஒன்று சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படுகிறது. அந்த வேலையை நிறுத்திவிட்டு அதே ஊரில் அங்கன்வாடி, நூலகம் இருக்கும் பகுதியில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆதிதிராவிட மக்களுக்கு மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும். ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர் கழிவறை வசதி ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். 

 

இந்த ஊரில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் தெரு மின் விளக்கு, குடிநீர், சுகாதார வளாகம் கட்டவும், காலை, மாலை இரண்டு வேலைகளிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். ஆதிதிராவிடர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவப்பிரகாஷ், என்.ஆடு பெரியசாமி, ஆர். எழில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் எம்.நிதி உலகநாதன், நல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.ராஜ்குமார், நகர செயலாளர் கே.செல்வராசு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்