/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4747.jpg)
கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக கடலூரில் தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில்ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் சக்திவேல் அங்கு வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்களின் வாகனத்தை ஆய்வு செய்தபோது லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. தங்களிடம் பத்தாயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் தலைமைக் காவலர் சக்திவேல் லஞ்சப் பணத்தைப்பெற்றுக் கொண்டதாக கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு மாணவர்கள் இமெயில் மூலமாகப்புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ராஜாராம் விசாரணை செய்த நிலையில், காவலர் சக்திவேல் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் சக்திவேலை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)