
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில், அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி சிந்துவுக்கு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில், பிரசவம் பார்க்க செவிலியர் அமுதா ரூ.5 ஆயிரம் கேட்டு சிந்துவின் உறவினர்களுடன் தகராறு செய்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில், இன்று திங்கள் கிழமை பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)