rajini

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ரஜினி மக்கள் மன்றம் விதிமுறைகள் குறித்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில் மன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்கவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற பல விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அவையாவன,

வாகனங்களில் ரஜினி மக்கள்மன்ற கொடியை நிரந்தரமாக பொறுத்தக்கூடாது. மன்ற கூட்டங்கள் மாநாடுகள் நடக்கும்பொழுது மன்ற கொடியை வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்தபிறகு மன்ற கொடிகளை வாகனத்திலிருந்து அகற்றவேண்டும்.

35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டோரும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.

மன்றக்கொடி துணியால் மட்டும் செய்யப்படவேண்டும் அப்படி துணியால் செய்பட்ட கொடியையே உறுப்பினர்கள் பயன்படுத்தவேண்டும். நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் போன்ற விஷயங்களை தலைமைதான் முடிவு செய்யும். தலைமையின் முடிவுதான் இறுதியானது.

ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்பு பதவி வழங்கப்படும். மன்ற உறுப்பினர்கள்பெண்களிடம் கண்ணியத்துடனும், நாட்டின்சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். மாற்று கருத்து சொல்பவர்களின் கருத்தை விமர்சிக்கலாமே தவிர தனிமனிதரை விமர்சனம் செய்யக்கூடாது.

மன்ற தலைமையின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மன்ற பெயரை பயன்படுத்தி நிதியோ, பொருளுதவியோ திரட்டக்கூடாது. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்துக்களை பதிவிடும்பொழுது மன்ற பெயரை பயன்டுத்தக்கூடாது.

மன்றத்தின் பெயரில் எந்ததனிநபரையும் கேலியாக சித்தரிக்க கூடாது.மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி தனியாக தேர்தல் குழுக்கள் அமைத்து நடத்தப்படும். என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.