சட்டமன்றத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.
இந்நிலையில் உடல் வெப்பம் 98.6 டிகிரி க்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கபடமாட்டார்கள். கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபடவுள்ளனர்.