Skip to main content

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது...

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

The body of the late singer SBP is buried at Tiruvallur

 

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது மகனும், நடிகருமான எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார்.

 

திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரது புகழைப் போற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அருகே திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தாமரைப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
pay for campaigning Case filed against BJP executive

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகையை சூழலில் திருவள்ளூரில் உள்ள ஆரம்பாக்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்ற ரீதியில் பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பாஜக கொடியை ஏந்திச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என ஐந்து பேருக்கு மொத்தமாக 500 ரூபாய் கொடுக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலானது.

சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை பாஜகவினர் கொடுக்கும் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சம்பத் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நொச்சிக்குப்ப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Tiruvallur BJP Prosecution against the candidate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக்கொடியை பயன்படுத்தி இருந்தார். அவருடன் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த பெண்களின் கைகளில் பா.ஜ.க. கொடியுடன் சேர்த்து தேசிய கொடியும் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின் பேரில் பாலகணபதி, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.