Skip to main content

தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்; புதுச்சேரிக்கு 5ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை 

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Boats moored at thengaithittu Harbor; No. 5 storm cage warning for Puducherry

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல்  சென்னையிலிருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.

 

சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் அருகே நாளை இரவில் கரையைக் கடக்கும் என நேற்று முதல் சொல்லப்பட்டது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப்பகுதிகளில் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

 

மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.  துறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய சிறைச்சாலையில் பார்த்திபன் செய்த ஏற்பாடு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
parthiban new year celebration in pondicherry central jail

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். 

இந்த நிலையில் பாண்டிச்சேரி மத்திய சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் நடத்தி வரும் பார்த்திபன் மனித நேய மன்றம் மூலமாக, பாடகர் ஸ்ரீ ராமை அழைத்து கொண்டு ஒரு இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். சிறைச்சாலையில் இருப்பவர்கள், புத்தாண்டை மிகசிறப்பாக, இதுவரை அவர்கள் பார்க்காத ஒரு இன்னிசையுடன் ஆரம்பிக்க நினைத்து இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.  

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில், சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக ஒரு அரங்கு வைக்கப்பட்டது. இதில் சிறைக் கைதிகளுக்கு பயன்படும் வகையில் தானமாக புத்தகம் பொதுமக்கள் கொடுத்தால் அதை கைதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பார்த்திபன் ஒவ்வொரு அரங்காக சென்று சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி மடிப்பிச்சை கேட்டு, சேகரித்த புத்தகங்களை அந்த அரங்கில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார்.